தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர், ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். மேலும், சக போட்டியாளர் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா, பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி உள்ள நிலையில், தொடர்ந்து நடித்து வருகிறார். நடிக்க வந்ததிலிருந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா, அவ்வபோது சில கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.