fbpx

லவ் டுடே திரைப்பட கதாநாயகனுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாயை பிளக்கும் ரசிகர்கள்!

பிரபல நடிகர் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் பிரதீப் ரங்கநாதன்.அந்த திரைப்படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த லவ் டுடே திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார்.

இந்த திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை சந்தித்தாலும், முடிவில் மாபெரும் வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான பிரதிப் ரங்கநாதனை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது இந்த திரைப்படம்.

மிக விரைவில் இந்த லவ் டுடே திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டோ அல்லது ரீமேக் செய்யப்பட்டோ வெளியாகும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு சுமார் 44.8 கோடி வரையில் லாபத்தை வாரி வழங்கியுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் தான் தானே இயக்கி நடித்த இந்த திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருப்பதை நினைத்து பிரதீப் ரங்கநாதன் பெருமைப்பட்டுக்கொண்டார். இந்த திரைப்படத்தை நடித்துக் கொடுக்கலாம் என்று நினைத்தபோது, அவருக்கு சம்பளமாக சுமார் 70 லட்சம் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர், தயாரிப்பு நிறுவனம் கூடுதலாக 80 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக லவ் டுடே திரைப்படத்திற்காக 1.50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.

Next Post

ரூ.1 கோடி அப்பு..!! பணத்தாசையில் ஓனரே நாடகமாடியது அம்பலம்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Mon Dec 12 , 2022
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் என்பவரது மகன் கணேசன். இவர் நிலம் வாங்கி விற்கும் கமிஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நிலம் ஒன்று வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ.2 கோடி பணத்தை பாதுகாப்பு கருதி சாமியார் கிணறு பகுதியில் உள்ள குடும்ப நண்பரான விவசாயி லோகநாதன் (45), என்பவரிடம் கடந்த 19ஆம் தேதி இரண்டு பைகளில் தலா ரூ.1 கோடி […]
ரூ.1 கோடி அப்பு..!! பணத்தாசையில் ஓனரே நாடகமாடியது அம்பலம்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

You May Like