சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி, யூடியூப் பக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் தான் கோவையைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் ரைடிங்கை விரும்பும் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும், அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்து, அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
பல பிரச்சனைகள் தன்னை சூழ்ந்தாலும், அனைத்தையும் சமாளித்து வரும் டிடிஎஃப் வாசன், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்தவகையில், அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளான இன்றைய தினம் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்ம் அவர் நாயகனாக அறிமுகமாகும் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தை செல்அம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் சூலாயுதத்துடன் புல்லட்டில் வீலிங் செய்தவாறு டிடிஎஃப் வாசன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வடிவேலு படத்தின் காட்சியையும், டிடிஎஃப் வாசன் படத்தின் போஸ்டரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.