திருமணமான சில வாரங்களே ஆகும் நிலையில் மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரவீந்தர் லிப்ரா ப்ரெடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார் . ரவீந்தர் சந்திரசேகர் , நட்புன்னாஎன்னனு தெரியுமா? முறுங்கைக்காய் சிப்ஸ் , நளனும் நந்தினியும் போன் பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தை தயாரித்து வருகின்றார். விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அவரது மனைவி மகாலட்சுமிதான் இதில் நடித்துள்ளார் படப்பிடிப்பு சமையத்தில் இருவருக்கும் காதலாகி திருமணம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நல்ல இணைபிரியா ஜோடியாக வலம் வரும் நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக சமீபத்தில் வீடியோவை வெளியிட்டிருந்தார் ரவீந்தர். இந்நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றது . திருமணமான சில வாரங்களிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.