fbpx

மகன் நடித்த ’மாமன்னன்’..!! படத்தை பார்த்த முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!! நெகிழ்ந்து போன மாரி செல்வராஜ்..!!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கி மாரி செல்வராஜ் 3-வது படமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மலையாள நடிகரும் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்தவருமான பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு ஆக்கியது. இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இத்திரைப்படத்தில் மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் முற்றும் மாறுபட்டு நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. இதுவே உதயநிதியின் கடைசி திரைப்படம். இப்படத்தை பார்த்த கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் படம் சிறப்பாக இருக்கிறது என தங்களது விமர்சனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது மகன் நடித்த மாமன்னன் திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜை கட்டித்தழுவி கொண்டாடியுள்ளார். இதை இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். 

Chella

Next Post

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்..? இனி பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை..!! அமைச்சர் ஆலோசனை..!!

Thu Jun 29 , 2023
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் மதுபான விற்பனை என்பது அரசின் மிக முக்கிய வருவாயாக இருக்கிறது. டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் சராசரியாக, 147 கோடிக்கு மதுபான விற்பனை நடக்கிறது. டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் சரக்குகள் மதுபானங்கள், கள்ளச்சாராயம் காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அனுமதியின்றி செயல்படும் பார்கள், […]

You May Like