fbpx

பாடாய்படுத்தும் மணிரத்னம்..!! அந்த 2 பேரும் சம்மதிக்கவில்லையாம்..!! ஒருவழியா ஓகே சொன்ன பிரபல நடிகை..!!

மணிரத்னத்தின் கனவு படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இப்படத்தில் சங்கமித்திருந்தனர். லைகாவுடன் மணிரத்னம் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார். இந்நிலையில், முதல் பாகமே கிட்டத்தட்ட 500 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது. இது தவிர ஓடிடி, சேட்டிலைட் உரிமங்கள் பல கோடிக்கு விற்கப்பட்டது.

பாடாய்படுத்தும் மணிரத்னம்..!! அந்த 2 பேரும் சம்மதிக்கவில்லையாம்..!! ஒருவழியா ஓகே சொன்ன பிரபல நடிகை..!!

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளை சேர்க்க மணிரத்தினம் விரும்பி உள்ளார். ஆகையால், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வந்தயத்தேவனின் காட்சிகளை அதிகப்படுத்த மணிரத்தினம் விரும்பி கார்த்தியிடம் கேட்டுள்ளார். ஆனால், சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

பாடாய்படுத்தும் மணிரத்னம்..!! அந்த 2 பேரும் சம்மதிக்கவில்லையாம்..!! ஒருவழியா ஓகே சொன்ன பிரபல நடிகை..!!

அதுமட்டுமின்றி மீண்டும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திற்காக தாடி எல்லாம் வளர்க்க முடியாது என்று கூறிவிட்டாராம். மேலும், மற்ற ஹீரோக்களான ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோரை அணுகிய போதும் இதே காரணத்தை சொல்லி நிராகரித்து விட்டார்கள். எனவே, பொன்னியின் செல்வன் கதையின் மைய கருவான ஐஸ்வர்யாவின் நந்தினி கதாபாத்திரத்தை அதிக காட்சிகள் எடுக்க மணிரத்தினம் முடிவு செய்துள்ளார். அதற்காக ஐஸ்வர்யா ராயை பாடாய்படுத்தி மணிரத்தினம் ஒத்துக்கொள்ள வைத்துள்ளார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.

Chella

Next Post

அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த ஆடியோ பறப்ப பட்டது - திருச்சி சூர்யா சிவா

Thu Nov 24 , 2022
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்கு பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக […]

You May Like