பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தால் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கலந்து கொண்டாலும் நான் தான் பிக்பாஸ் ஆக இருப்பேன் என்றும் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் மன்சூர் அலிகான், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன். அப்படியே கலந்து கொண்டாலும் நான் தான் பிக்பாஸ் ஆக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி போல் ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதை ஒளிபரப்ப எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் தான் ஆதரவு கொடுக்க தயார் என்றும் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்காது. விவசாயத்துக்கு முக்கியம் கொடுக்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்தால் அந்த நிகழ்ச்சியை நானே பிக்பாஸ் ஆக இருந்து நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்களை அழைக்கலாம் என்றும் விவசாயத்திற்கு தேவையான நவீன கருவிகள் இல்லாமல் நம் விவசாயிகள் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பல அதிநவீன கருவிகள் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இளைஞர்களுக்கு விவசாயத்தில் ஈடுபட ஒரு வழிகாட்டியாகவும் இந்த பிக்பாஸ் அமையும். இந்த நிகழ்ச்சி மூலம் இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக விவசாயத்தை வளர்ப்பதற்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன். இந்த நிகழ்ச்சியை எந்த தொலைக்காட்சி ஒளிபரப்ப முன்வந்தாலும் அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன்” என்று தெரிவித்துள்ளார்.