fbpx

ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு..!! விவகாரத்தால் ட்ரெண்டிங் ஆன 5 டிவி தொகுப்பாளர்கள்..!!

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட, சின்னத்திரையில் தான் அதிக கிசுகிசுகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது, ஆதாரங்களுடன் பேட்டி கொடுப்பது என தினமும் ஒரு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு முன்னரே 5 டிவி தொகுப்பாளர்கள் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திவ்ய தர்ஷினி (டிடி) : இப்போது இருக்கும் பல இளம் தொகுப்பாளர்களுக்கு திவ்ய தர்ஷினியை போல் ஆக வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. தன்னுடைய திறமையான பேச்சுக்களால் பிரபலங்களை கவர்ந்த இவர், கேரளாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அவருடைய முன்னாள் கணவர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரம்யா : விஜய் டிவியில் பிரபலமாக இருந்த மற்றொரு தொகுப்பாளினி தான் ரம்யா சுப்ரமணியம். இவர் திருமணம் ஆகி 10 நாட்களுக்குள்ளே கணவரை விட்டு பிரிந்து விட்டார். அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து விவாகரத்தும் செய்து விட்டார். தற்போது தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பிரியங்கா : டிடி விட்ட இடத்தை தன்னுடைய வித்தியாசமான வர்ணனையால் கெட்டியாக பிடித்துக் கொண்டவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றிய வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு இருந்த சமயத்தில் தான் இவர்கள் இருவருக்கும் விவாகரத்தான செய்தி வெளியாகியது.

விஜே மகேஸ்வரி : சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் மகேஸ்வரி. அதன் பின்னர் சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்து வந்த இவர், திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து கொண்டார். பல நிகழ்ச்சிகளில் ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை பற்றி இவர் பேசியிருக்கிறார்.

ரேஷ்மா : ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கியவர் தான் ரேஷ்மா. இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் உடன் பிறந்த சகோதரி. திருமணத்திற்குப் பின் வெளிநாட்டில் செட்டில் ஆகிய இவர், கணவருக்கும் தனக்கும் ஒத்து வராததால் விவாகரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வருகிறார்.

Chella

Next Post

சொல்ல சொல்ல கேட்காமல் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரின்…….! கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கொடூர கணவன் கர்நாடகத்தில் பகீர் சம்பவம்…..!

Mon Jun 26 , 2023
கர்நாடக மாநிலம் சிக்க பல்லாப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பட்ல பள்ளியைச் சேர்ந்தவர் விஜய் (35) துணி வியாபாரியான இவருக்கு மாலா (28) என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது. விஜய் சிந்தாமணி என்ற பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் அவருக்கும் மாதேஷ் (32) என்ற மற்றொரு துணி வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாண்டியாம்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த மாதேஷும் சிந்தாமணி பகுதியில் துணி […]

You May Like