தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தரும் ஒருவர். இவர், லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இதற்கிடையே, கடந்தாண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இந்த ஜோடி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமடைந்தனர். மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடினர்.
இந்நிலையில், ரவீந்தர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், “வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா” என்று மகாலட்சுமியைக் குத்திக் காட்டிப் பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார். அதாவது ரவீந்தர் கைது செய்யபட்டதற்கு மகாலட்சுமியை கட்டிக்கொண்டது தான் முக்கிய காரணம் எனவும், அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டா என்ன நிகழும் என்பதற்கு மகாலட்சுமி ஒரு எடுத்துக்காட்டு என்றும் ரவீந்தரை பணத்தாசையில் தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்’ என பயில்வான் பேசியிருக்கிறார்.