’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டிக்கு தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடித்துள்ளார். 2D Entertainment தயாரிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி ‘வணங்கான்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் ரெக்கார்டு செய்யும் பணிகள் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வணங்கான்’ திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.