fbpx

மெர்சல் வசூலை முறியடித்த ’வாரிசு’..!! அடுத்து பிகில்..? இதுவரை எவ்வளவு தெரியுமா..? கொண்டாடும் படக்குழு..!!

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம், அவரது முந்தையப் படங்களில் ஒன்றான ‘மெர்சல்’ படத்தின் வசூலை முறியடித்துள்ளது.

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெளிவந்த முதல் 2 நாட்கள் சீரியல் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதையெல்லாம் முறியடித்து இந்தப் படம் தற்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது. எதிர்மறை விமர்சனங்களை தவிடுபொடியாக்கி 11 நாட்களிலேயே ரூ.250 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்திருந்தது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருந்தது. இந்நிலையில், விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது. 14 நாட்களில் ‘வாரிசு’ திரைப்படம் ரூ.268.32 கோடி வசூலித்துள்ள நிலையில், ‘மெர்சல்’ திரைப்படம் ரூ.260 கோடி அப்போது வசூலித்திருந்தது. மேலும், கடந்த 2018இல் வெளியான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தின் வசூலையும் முந்தியுள்ளது.

இதற்கிடையே, ‘வாரிசு’ படத்தின் வெற்றியை அப்படக்குழுவினர் கொண்டாடியுள்ள புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, ராதிகா, சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் வம்சி பைடிபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் உள்ளனர். எனினும், ‘வாரிசு’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால், 300 கோடி ரூபாயை படத்தின் வசூல் தொட்டால்தான் லாபமானப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

மீண்டும் திரையரங்குகளில் ஆள வரும் ’ஆளவந்தான்’..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

Wed Jan 25 , 2023
தமிழ் சினிமாவில் தற்போது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், நடிகர் ரஜினியின் பாபா திரைப்படம், டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு, அதில் சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு கடந்த மாதம் அவரின் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. புது படங்களுக்கு நிகராக இப்படம் வசூலித்து இருந்தது. இந்நிலையில், கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் தற்போது ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் கடந்த 2001இல் ரிலீஸ் ஆனது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படத்தை […]
மீண்டும் திரையரங்குகளில் ஆள வரும் ’ஆளவந்தான்’..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

You May Like