fbpx

Mia Khalifa..!! ஆபாச படத்திற்காக பெயரை மாற்றிய மியா கலிஃபா..!! அவர் உண்மையான பெயர் என்ன தெரியுமா..?

ஆபாச படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் தான் மியா கலிபா (Mia Khalifa). கடந்த 2014ஆம் ஆண்டு ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 5 ஆண்டுகள் மட்டுமே அப்படங்களில் நடித்தார். அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு ஆபாச படங்களில் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும், இன்றளவும் அவரது ஆபாச வீடியோக்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர், வேறு தொழில் செய்து வருகிறார்.

லெபனான் நாட்டில் பிறந்தவரான நடிகை மியா கலிபா, சிறுவயதிலேயே தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்த கையோடு ராணுவ அகாடமியிலும் பயிற்சி பெற்றிருக்கிறார். பின்னர் சில ஆண்டுகள் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஆபாச திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கிறிஸ்துவரான இவருக்கு சிறுவயதில் பெற்றோர் வைத்த பெயர் சாரா ஜோ சாமுன்.

சாரா ஜோ சாமுன் என்கிற கிறிஸ்துவ பெயர் கொண்ட இவருக்கு மியா கலிபா என்கிற இஸ்லாமிய பெயர் வரக் காரணம் அவரது முதல் ஆபாச படம் தான். அந்த படத்தில் மியா கலிபா என்கிற இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மியா என்பது அவரின் செல்ல நாய்க்குட்டி பெயராம். அதோடு அவருக்கு பிடித்தமான ராப் பாடகர் விஸ் கலிபாவின் பெயரில் இருந்து கலிபாவை மட்டும் எடுத்துக்கொண்டு, மியா கலிபா என்கிற பெயரை வைத்துக்கொண்டார்.

ஹிஜாப் அணிந்தபடி மியா கலிபா ஆபாச படத்தில் நடித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவர் நடித்த அந்த ஆபாச படமும் வைரலானது. அவரின் இந்த ஆபாச படத்திற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தில் நடித்தது அவரது பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்களும் மியாவை கைவிடுவதாக அறிவித்தனர். ஹிஜாப் அணிந்து நடித்ததற்காக அவருக்கு கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி தொடர்ந்து ஆபாச படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்க தொடங்கியதால், தன்னை மியா கலிபா என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் அவரின் ஒரிஜினல் பெயரான சாரா ஜோ சாமுன் என்பது காலப்போக்கில் காணாமல் போனது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Chella

Next Post

தமிழக அரசு வழங்க உள்ள 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறுவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்…..? வெளியிடப்பட்டது வழிகாட்டு நெறிமுறைகள்….!

Tue Jun 27 , 2023
தமிழ்நாட்டில் குடும்பத்தலைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை மிக விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், […]

You May Like