fbpx

மிசா..!! கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படம் இதுதானா..? உண்மையை போட்டுடைத்த வடிவேலு..!!

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் நடிகராக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்தும் விலகினார். அவரின் கடைசி படமாக மாமன்னன் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் அப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக இருந்த படம் என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது எந்த சம்பவம் என்பதை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தனர். அந்த சீக்ரெட்டை தான் சமீபத்திய பேட்டியில் வடிவேலு உடைத்துள்ளார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயோபிக்கை தான் கமல்ஹாசன் படமாக தயாரிக்க இருந்தாராம். அதில் உதயநிதி நடித்தால் பொறுத்தமாக இருக்கும் எனக்கருதி, அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்படத்திற்கு மிசா என பெயரும் வைத்திருந்தார்களாம். ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் அனுபவித்த கொடுமைகளை மையமாக வைத்து அப்படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த தகவலை மதுரையில் நடைபெற்று வரும் ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் வடிவேலு கூறி இருக்கிறார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் விலகிவிட்டதால் மிசா திரைப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இணைந்து பணியாற்றிய பின்னர் கமலும், விஜய் சேதுபதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

வயிறு வலின்னு மருத்துவமனை சென்று நெஞ்சுவலியில் இறந்த வாலிபர்! தவறான சிகிச்சையில் பலியானாரா?

Tue Mar 21 , 2023
வண்டலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லி குமார் வயது 48. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்பநாயகி என்ற மனைவியும் பரத் குமார் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பரத்குமாருக்கு வயிற்று வலி […]

You May Like