fbpx

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்..!! சோஷியல் மீடியாவில் படு வைரல்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்து வரும் ‘வித்தைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். இவர் கடந்த ஆண்டு ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ’வித்தைக்காரன்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தை அருள்நிதி நடித்த தேஜாவு படத்தை தயாரித்த ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கியுள்ள இப்படத்தில் சதீஷுடன் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்ரமணியம் சிவா, மதுசூதன், ஜான் விஜய், ஜப்பான் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விபிஆர் இசையமைக்க, ஒளிப்பதிவு பணியை யுவ கார்த்திக்கும், படத்தொகுப்பு வேலைகளை அருள் இ சித்தார்த்தும் செய்து வருகின்றனர். அவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற நான் வாழ்த்துவதோடு, சதீஷ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கனமழை..!! இந்த லிஸ்ட்ல உங்க மாவட்டமும் இருக்கான்னு பாருங்க..!!

Thu Apr 27 , 2023
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான […]

You May Like