இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படங்களில் ஒன்று ஜவான் திரைப்படம். விஜய்யின் பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே இப்படத்தினுடைய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இந்நிலையில், இன்று ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். படத்தில் அவரது ரோலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருப்பது ட்ரைலர் பார்க்கும்போதே தெரிந்தாலும், அவர் எந்த விதமான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பவம் ரூ.11 கோடி என்று கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் நடிக்கும்போது கிடைக்கும் சம்பளத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.