லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பின்னர், டப்பிங் மேற்கொள்ளப்பட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் 2-வது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது. நேற்று லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
‘Keep calm and avoid the battle’ என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. இந்த போஸ்டரை படக்குழுவும், இயக்குநர் லோகேஷும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று ஒரு போஸ்டரை படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கன்னடம் மொழியின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 30ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு முன்னதாகவே அறிவித்தது. ஆனால், படத்தின் இசை வெளியீடு எங்கு நடக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் இசை வெளியீடு வரும் 30ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.