விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுவாக ரசிகர்களை கவர்ந்தவை தான். குறிப்பாக ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்சியானது 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் தொகுப்பாளர் கோபிநாத், சிறப்பாக நடத்தி வருகிறார். இதில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்றன.
இந்நிலையில், இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதாவது “லவ் பண்ண சொல்லும் பெற்றோர்கள் – காதல் அமையாத பிள்ளைகள்” என்ற தலைப்பின் கீழ் இந்த விவாதம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில், தாய் ஒருவர் தனது மகளுக்கு 23 வயதாகியும் ஒரு லவ் லெட்டர் கூட இதுவரை வரவில்லை என்று கூறி கவலைப்பட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ’நான் என்ன பண்ணுறது, லவ் செட் ஆகவில்லை’ என்று பதிலளிக்கிறார்.
மேலும், மற்றொரு அம்மாவும் மகனுக்கு காதல் அமையவில்லை என்று கூற உடனே கோபிநாத் “பெரிய பையன் லவ் பண்ணாட்டி என்ன..? சின்ன பையன் நிச்சயம் இந்த நேரத்துல ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருப்பான்” என்று கூறி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.