சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’மீனாட்சி பொண்ணுங்க’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் கூறியிருந்தார்.
அதாவது, அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு பிரபல நடிகர் அவருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகம். அவர் மீது பல பெண்களுக்கு கிரஸ் இருக்கிறது. அந்த நடிகருடன் ஒரு படத்தில் நான் நடித்தேன். அவர் என்னுடைய மொபைல் நம்பர் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்தப்படி அடுத்தடுத்து மெசேஜ் வந்து கொண்டிருந்தது.
உடனே அவரை பிளாக் செய்துவிட்டேன். மேலும் சீரியல் நடிகர் அர்னவ் என்னிடம் போன் காலில், வீட்டில் என் மனைவி இல்ல நீ வாரியானு கூப்பிட்டாரு அது போன்று எல்லாம் கேட்பார் என்று ரிஹானா அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.