பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிஃபோன் ராஜ் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சினிமாத் துறையை சார்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, படங்களில் நடிப்பது பற்றி அவதூறாக பேசி அசிங்கப்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். ஒரு பத்திரிகையாளராகவும், நடிகராகவும் இருந்துள்ள பயில்வான், இப்படி கேவலமாக நடந்து கொண்டதை பலரும் கண்டித்து புகாரும் அளித்து வந்தனர். அதை மீறியும் பயில்வான் ரங்கநாதன் கடும் விவாதங்களையும், கருத்துக்களையும் கூறி சர்ச்சையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் கூட இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயரிடம் சண்டை போட்ட வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து பல நடிகைகளை பற்றி படுமோசமான வார்த்தையில் விமர்சித்தும் வந்தார்.
இந்நிலையில், பயில்வான் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிஃபோன் ராஜ் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். ’அவருக்கு வயசாகிவிட்டது. அவரால் எழுந்து கூட நடக்க, நிற்க முடியாது. அதனால் குடும்ப குட்டிகளை காப்பாற்ற யூடியூப் மூலம் நடிகைகளை பற்றி கேவலமாக பேசி காசு சம்பாதித்து வருகிறார்.
அப்படி நடிகைகளின் நடவடிக்கையை பற்றி பேசும் பயில்வான் ரங்கநாதன், நடிகை நமீதாவின் உடல் மிகவும் எடுப்பாக இருக்கும் என்று வர்ணித்து பேசி வீடியோவையும் வெளியிட்டார். அப்படியென்றால் அவரும் நடிகைகளை ரசிப்பவர் தானே. அடுத்தவன் படுக்கைக்குள் எதற்காக பயில்வான் நுழைகிறார்’ என்று பாய்ந்து பேசியுள்ளார்.