fbpx

கமலுடன் இணைகிறார் நவரச நாயகன் கார்த்திக்..! இந்தியன் – 2 படத்தில் முக்கிய கதாபாத்திரம்..?

கமல்ஹாசனின் இந்தியன் -2 படத்தில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தந்தை – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசுத் துறையில் அதிகாரிகள் செய்யும் ஊழலை களையும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். லைகா புரொடெக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

கமலுடன் இணைகிறார் நவரச நாயகன் கார்த்திக்..! இந்தியன் - 2 படத்தில் முக்கிய கதாபாத்திரம்..?

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்து, கொரோனா ஊரடங்கு, இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடு உயர்நீதிமன்றம் வரை சென்றது ஆகிய பிரச்சனைகளால் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது. இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் -2 படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கவுள்ளதால், கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தில் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கமலுடன் இணைகிறார் நவரச நாயகன் கார்த்திக்..! இந்தியன் - 2 படத்தில் முக்கிய கதாபாத்திரம்..?

முன்னதாக இந்த படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகி விட்டதாகவும், மேலும் அவருக்குப் பதில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய போது, நடிகை காஜல் அகர்வால், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! சென்னை வருகிறார் மகேந்திர சிங் தோனி..!

Sun Aug 7 , 2022
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பங்கேற்கிறார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் பதக்க வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், வீரர்-வீராங்கனைகள் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு முன்னின்று செய்து வருகிறது. அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழாவிலும் தமிழக அரசு கவனம் […]
IPL-லிருந்து ஓய்வு..!! மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தோனி..? பிசிசிஐ பரிசீலனை..!!

You May Like