fbpx

நயன்தாரா விதிகளை மீறவில்லை… அரசே தெரிவித்த தகவல் !!

நயன்தாரா விதிகளை மீறவில்லை என அரசே தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் உண்மையான திருமண தேதியை அறிவித்துள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனால் அரசே விசாரணையை தொடங்கியது. இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு விதிமீறல் நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை வெளியிட்டது அரசு. இருவரும் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. மார்ச் மாதத்தில் கருப்பையில் சினை முட்டை வைக்கப்பட்டதாகவும் . 6 மாதத்தில் பிரசவம் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா 2016ம் ஆண்டு மார்ச் 11ல் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக அதுதான் உண்மையான திருமண தேதி எனவும் ஊரறிய திருமணம் செய்து கொண்டது ஜூன் 9 எனவும் தெரிவித்துள்ளத. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவாகரம் சர்ச்சை ஆன நிலையில் உண்மைத்தன்மை பற்றி பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனால் இரட்டை குழந்தைகள் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

Next Post

முதுகலை படித்துமுடித்தால் வருடத்திற்கு இவ்வளவு உதவித்தொகையா?

Wed Oct 26 , 2022
முதுகலைப்படிப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆண்டுக்கு ரூ.20000 பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி, எச்எப்எல் வித்யாதன் என்ற திட்டத்தின் கீழ் உதவித்தொகையை இந்திய முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வீதம் அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் பயனடையலாம்.நாடு முழுவதும் மத்திய , மாநில அரசுகள் தவிர்த்து பல முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல நலத்திட்டங்களை […]

You May Like