fbpx

சினிமாவை விட்டு விலகுகிறார் நயன்தாரா..? இந்த ஒரு காரணத்திற்காக மட்டும்தானாம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

”ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அவர் தெலுங்கு, மலையாளம் என தன் நடிப்பால் நம்பர் ஒன் நடிகையாகி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

சினிமாவை விட்டு விலகுகிறார் நயன்தாரா..? இந்த ஒரு காரணத்திற்காக மட்டும்தானாம்..!

இந்நிலையில், நடிகை நயன்தாரா திரையுலகில் இருந்து விலக போவதாகவும், அதற்கு ஒரே ஒரு காரணம்தான் என்று தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, தனது நீண்டநாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனால், நடிகை நயன்தாரா தற்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் பட தயாரிப்பு பணிகளை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் அதற்கு ஒரே காரணமாக தாலி சென்டிமென்ட் என்று கூறப்படுகிறது.

சினிமாவை விட்டு விலகுகிறார் நயன்தாரா..? இந்த ஒரு காரணத்திற்காக மட்டும்தானாம்..!

நயன்தாராவின் குடும்பத்தினர் எந்த காரணத்தை முன்னிட்டும் படப்பிடிப்பின்போது தாலியை கழட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதால், தற்போது அவர் நடித்து வரும் படங்களில் கூட தாலியை கழட்டாமல் தான் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பல்வேறு கேரக்டரில் நடிக்கும்போது தாலியை கழற்றி வைத்துவிட்டு நடிக்கும் நிலை ஏற்படும் என்பதால், திரையுலகில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பார் என்றும் அதன் மூலம் பல புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்க நயன்தாரா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

”டீ பிரியர்களுக்கு இன்ப செய்தி”..! அதிகளவு டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமாம்..! ஆய்வில் தகவல்

Thu Sep 1 , 2022
‘டீ’ அதிக அளவு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அனைத்து தரப்பினர் வாழ்விலும் தேநீர் என்பது மிக முக்கியமான அங்கமாகவே இருந்து வருகிறது. தேநீர் குடித்தவுடன் மனம் புத்துணர்வு பெறுகிறது, சுறு சுறுப்பாக மாறுகிறோம். ஆனால், அதிக அளவு தேநீர் உட்கொள்வதால் ஏற்படும் நன்மை-தீமை குறித்து ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு […]

You May Like