fbpx

Nayanthara | ’ஜவான்’ படத்தில் லிமிட்டை மீறிய நயன்..!! ’சந்தேகத்துடனே சுற்றி வரும் விக்கி’..!! எந்த கண்டிஷனும் இல்லையாம்..!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனால், இந்த முறை மிகப்பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும் என முயற்சியில் களமிறங்கியிருக்கிறார். அதற்காகத்தான் ஜவான் படத்தில் அவர் எந்த லிமிட்டும் இல்லாமல் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள செகண்ட் சிங்கிள் பாடல் பல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் அதில் ஷாருக்கானுடன் நடிகை நயன்தாரா மிக நெருக்கமாக நடித்திருக்கிறார். அதில் முத்தக் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இதனைப் பார்த்த பலரும் விக்கி இதெல்லாம், உங்கள் மனைவி இப்படி செய்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர்.

முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா சில படங்களில் நடித்திருந்தாலும் எல்லை மீறாத அளவுக்கு தான் அவர் நடித்திருக்கிறார். ஆனால், ஜவான் பாடலில் அவர் ஓவர் ரொமான்டிக்காக நடித்திருக்கிறார். உண்மையில் பாலிவுட்டில் தன்னுடைய அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போடுவதற்காக தான் இப்படி எந்த கண்டிஷனும் இல்லாமல் நடித்துள்ளார் நயன்தாரா.

மேலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இவர் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதனாலயே அவர் இப்போது பாலிவுட் திரையுலகிற்கு ஏற்றது போல் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் பாவம் விக்கி தான் பொண்டாட்டியை பாதுகாக்க கொஞ்சம் சந்தேகத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

Chella

Next Post

Yogi Babu Salary | ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக யோகிபாபு வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..?

Tue Aug 15 , 2023
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இடம்பெயர்ந்தவர் தான் யோகிபாபு. முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது அவர் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார் யோகிபாபு. இதற்கிடையே, நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் யோகிபாபு. முதல் படமே நயன்தாராவுடன் ஹீரோவாக […]

You May Like