fbpx

இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய நயன்தாரா..!! விஜய்யின் சாதனையை முறியடிப்பாரா..? முதல் பதிவு என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசன் இன்று வெளியாகியுள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா, சமூக வலைதளத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இவர்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி இருக்கிறார். இதில், முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், ’நா வந்துட்டேன்னு சொல்லு’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய உடனே ஃபாலோவர்ஸ்களின் எண்ணிக்கை சரசரவென்று எகிறியது. இந்த சாதனையை நடிகை நயன்தாரா முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Chella

Next Post

உங்களுக்கு தொப்பை அதிகமாக இருக்கிறதா….? இனி கவலையே வேண்டாம், இதோ வந்துவிட்டது தொப்பை குறைப்பிற்கான எளிமையான வழி….!

Thu Aug 31 , 2023
தொப்பை என்பது சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதை எப்படி குறைப்பது என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான உணவு முறையில், இந்த தொப்பையை குறைத்தால் தான், பக்க விளைவு என்பது ஏற்படாமல் இருக்கும். அதோடு, உணவு கட்டுப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலமாக, தொப்பையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜங்க் உணவுகளை முற்றிலுமாக […]

You May Like