fbpx

விஜயுடன் மோதும் நிவின் பாலி..!! வில்லனாக களமிறக்கும் லோகேஷ்..!! ’தளபதி 67’ மாஸ் அப்டேட்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67 படத்தில் நடிகர் நிவின் பாலி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த ஆக்ஷன் படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரித்விராஜ் கால்சீட் பிரச்சனை காரணமாக விஜய்- 67வது படத்தில் இ விலகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயுடன் மோதும் நிவின் பாலி..!! வில்லனாக களமிறக்கும் லோகேஷ்..!! ’தளபதி 67’ மாஸ் அப்டேட்

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மற்றொரு மலையாள நடிகரான நிவின் பாலியை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரேமம் படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமான நிவின் பாலி, தமிழில் நேரம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பள்ளி மாணவர்கள் 5 பேர் மாயம்… போலீஸ்  தீவிர விசாரணை…

Sun Oct 30 , 2022
சேலம் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் மாமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை பகுதியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்த அவரது தம்பி, இவர்களின் நண்பர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி 8ம் வகுப்பு படித்து வந்தனர். […]

You May Like