‘FDFS’ எனப்படும் முதல் நாள் முதல் காட்சி என்பது தற்போது ட்ரெண்டாகி விட்டது.. தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை முதலில் பார்த்துவிட வேண்டும், சமூக வலைதளங்களில் விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரும் முதல் ஷோவை பார்கின்றனர். பொது உச்ச நட்சத்திரங்களின் படம் என்றால் முதல் 3 நாட்களிலேயே வசூலை குவித்து விடும்.. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நாளில் வசூலை அள்ளிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்..
விருமன் : சூர்யாவின் 2டி நிறுவனம் தய்யாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்.. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.. முத்தையா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி, அதிதி, கருணாஸ், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம் முதல் நாளிலேயே 8.21 கோடி வசூல் செய்துள்ளது.
KGF 2 : யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி, கேஜிஎஃப் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.. நாடு முழுவதும் இப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை முறியடித்தது.. தமிழகத்தில் பீஸ்ட படத்துடன் வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் 8.24 கோடி ஆகும்..
டான் : டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு, உச்ச நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் போலவே, நல்ல வரவேற்பு கிடைத்தது… சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் உருவான டான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 9.47 கோடி.
RRR : பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் மற்றொரு பிரம்மாண்ட படைப்பு RRR .. . ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திர கனி என பலரின் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.. ஆரின் நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கும். தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளில் RRR படம் 12.73 கோடி செய்தது..
எதற்கும் துணிந்தவன் : ஜெய் பீம், சூரரை போற்று போன்ற வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து மீண்டும் கம்ர்ஷியல் படமாக உருவான எற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்தார். பாண்டிராஜ் இயக்கிய இந்த படம், முதல் நாளில் 15.21 கோடி வசூல் செய்தது..
விக்ரம் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபக்த பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான விக்ரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது… ஓடிடியில் படத்தை வெளியிட்ட பிறகும் திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடியது.. இந்த படத்தின் முதல் நாள் வசூல் 20.61 கோடி ஆகும்..
பீஸ்ட் : பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், நெல்சனின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.. இப்படத்தில் செல்வ ராகவன் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் முதல் நாளில் 26.40 கோடி வசூல் செய்தது..
2022 ஆம் ஆண்டு வெளியான படங்களில் வலிமை தான் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் உள்ளது. ஆம்.. இத்தனைக்கு இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தன.. ஆனால் இப்படத்தின் முதல் நாள் வசூல் 36.17 கோடி.