தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நடிகர்களில் வடிவேலு முக்கியமானவர்.. வடிவேலுவின் இந்த வளர்ச்சிக்கு நடிகர் விஜயகாந்தும் முக்கிய காரணம்.. ஆரம்பக்காலத்தில் வடிவேலுவுக்கு நிறைய உதவிகளை விஜயகாந்த் செய்துள்ளார்.. வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த வடிவேலுவுக்கு தனது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது விஜய்காந்த் தான்…
அதற்கு பின்னரே வடிவேலுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னர் சிறிய ஹிரோக்கள் தொடங்கி பல முன்னணி ஹீரோக்களுடன் வடிவேலு இணைந்து நடித்தார்.. அதிலும் விஜயகாந்த், வடிவேலு கூட்டணியில் வரும் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை ரசிக்கும் படியாகவே அமைந்துள்ளன..
ஆனால் சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் – வடிவேலு கூட்டணி முறிந்தது.. அரசியல் ரீதியான பிரச்சனையாக அது மாறியது.. சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலுவின் வீட்டில் சிலர் கல் எறிந்து பிரச்சனையில் ஈடுபட்டனர்.. விஜயகாந்த் கட்சி தொண்டர்கள்தான் என்று கூறிய வடிவேலு, விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் விஜயகாந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது வடிவேலுவின் அந்த குற்றச்சாட்டுகளை பற்றி விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என்னுடைய கட்சியை சேர்ந்த யாரும் இந்த செயலை செய்யவில்லை என்றும், இந்த பிரச்சனை பின்னால் யார் இருக்கிறார் என்று தனக்கு தெரியும் என்று கூறினார்.. ஆனால் அந்த நடிகரின் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார். அவரின் பெயரை வெளியே கூறினால் வடிவேலுக்கு சிக்கல் வரும் என்று கருதியே, அந்த பழி தன் மீதே இருக்கட்டும் என்று விஜயகாந்த் கூறிவிட்டாராம்..