fbpx

’என்னதான் இருந்தாலும் அது என்னோட Wife’..!! சமந்தாவை சந்தித்து பேசிய கணவர் நாக சைதன்யா..!!

நாக சைதன்யாவும், சமந்தாவும் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யா, சமந்தாவை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்வில், சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால், இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தங்கள் படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். இந்நிலையில், சமந்தா சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பற்றி தெரிவித்திருந்தார். மேலும், அதன் மூலம் அவருக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்கள் பற்றியும் மனம் உருகினார்.

’என்னதான் இருந்தாலும் அது என்னோட Wife’..!! சமந்தாவை சந்தித்து பேசிய கணவர் நாக சைதன்யா..!!

அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், கூடிய விரைவில் சமந்தா இந்த நோயில் இருந்து வெளிவர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். அவரின் இந்த அறிவிப்புக்கு பிறகு அவருடைய கொழுந்தனார் அதாவது நாக சைதன்யாவின் சகோதரர் அகில் ஆறுதல் கூறியிருந்தார். இதைப் பார்த்த பலரும் நாகச் சைதன்யா, சமந்தாவுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், இது பற்றி எந்த கருத்தையும் நாக சைதன்யா தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அவர் ஒரு பிரச்சனை எல்லாம் மறந்துவிட்டு தன் காதல் மனைவியை தேடி சென்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

’என்னதான் இருந்தாலும் அது என்னோட Wife’..!! சமந்தாவை சந்தித்து பேசிய கணவர் நாக சைதன்யா..!!

பல மாதங்களாக ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிந்து இருந்த இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேசியிருக்கின்றனர். நாக சைதன்யா, சமந்தாவின் உடல்நிலை பற்றி கேட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளையும் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடுவது பற்றியும் அவர்கள் பேசியிருக்கின்றனர். இதனால், கூடிய விரைவில் அவர்கள் இணையும் அந்த சந்தோஷமான செய்தி அறிவிக்கப்படும் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இந்த செய்தி தற்போது அவர்களுடைய ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. அவர்கள் சேரப் போகும் அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Chella

Next Post

நாய்க்கு தாமதமாக சோறு வைத்ததால் கொலை…!அதிர்ச்சி சம்பவம்!

Sun Nov 6 , 2022
நாய்க்கு தாமதமாக சோறு வைத்த காரணத்தினால் உறவுக்கார பையனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மன்னேகோடே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் ஹர்ஷத் மற்றும் ஹக்கீம். இன்று காலை ஹக்கீமும் அவரது நண்பர்களும் ஹர்ஷத்தை மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் ஹர்ஷத் மாடியில் இருந்து விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவன் மரணமடைந்தான். இதையடுத்து […]

You May Like