வரும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கட்டாயம் உறுதி மொழி ஒன்றை எடுக்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் மறைந்த தலைவருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை இந்த உறுதிமொழியை கட்டாயம் எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தில் ஓர் உறுதி ஏற்கின்றோம். சமுதாயத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருப்போம் என்று உறுதி மொழி ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த உறுதிமொழியை அனைத்து பள்ளி மாணவர்களும் 14-ம்தேதி காலை இறைவணக்கத்தின்போது சமூக முன்னேற்ற உறுதிமொழி ஏற்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.