fbpx

ஒன்னு அப்படி..!! இல்லைனா இப்படி..!! திடீரென குடும்ப குத்துவிளக்காக மாறிய ரம்யா பண்டியன்..!!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஒரு மாதமாகவே கவர்ச்சி அலப்பறை செய்யும் விதமாக ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது குடும்ப குத்து விளக்காக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும், நடிகைகள் பட்டியலில் உள்ளவர் தான் ரம்யா பாண்டியன். ஆனால், முன்னணி நடிகைகள் அளவிற்கு ரசிகர்கள் மனதில் ரீச் ஆகிவிட்டார். இதற்கு முக்கிய காரணம், அடிக்கடி இவர் நடித்தி வரும் போட்டோ ஷூட் அலப்பறை தான். கடந்த மாதம் முழுக்க கவர்ச்சி களைகட்டும் புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன் தற்போது அடக்கம்… ஒடுக்கமாக சல்வாரில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

ஒன்னு அப்படி..!! இல்லைனா இப்படி..!! திடீரென குடும்ப குத்துவிளக்காக மாறிய ரம்யா பண்டியன்..!!

பொதுவாக, திரையுலகில் அறிமுகமாகும் ஹீரோயின்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயங்குவார்கள். ஆனால், ஜோக்கர் என்கிற வெற்றி படத்தில் நடித்த பின்பு, அதிரடியாக விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரம்யா அழகான நடிகை மட்டும் அல்ல, சமயோஜித புத்தியுடன் செயல்படுபவர் என்பதையும் நிரூபித்தார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி என்கிற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதே போல் கடைசியாக இவர், நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம், மலையாளத்தில் ஓரளவுக்கு வெற்றிபெற்ற போதிலும், தமிழில் படு தோல்வியை சந்தித்தது. ச்கடந்த சில மாதங்களாக ரம்யா பாண்டியன் கூடுதல் கவர்ச்சியோடு, ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் உட்பட பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், அவை மிகப்பெரிய அளவில் வைரலானது. 

இந்நிலையில் திடீர் என குடும்ப குத்துவிளக்காக மாறிய ரம்யா பாண்டியன், சிவப்பு நிற சல்வாரில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது மட்டும் இன்றி, ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது, ரம்யா பாண்டியன், தன்னுடைய சித்தப்பா… அருண் பாண்டியன் ஃபேமிலியுடன் இணைந்து, திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடைய தங்கை, கீர்த்தி பாண்டியன் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Chella

Next Post

Crime..!! காதலித்தபோது கசமுசா..!! விவாகரத்து பெண்ணை டார்ச்சர் செய்த வாலிபர்..!! நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!

Wed Apr 26 , 2023
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் ஜெய்ப்பூர் மண்டலத்தில் உள்ள இந்தரம் கிராமத்தைச் சேர்ந்த பெத்தபள்ளி கனகய்யா, பத்மா தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் (24) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தன்னை காதலிக்கும்படி மகேஷ் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே, இளம்பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் கடந்தாண்டு நஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த […]

You May Like