கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உயர்ந்து சினிமாவில் இன்று தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் தனுஷ். அந்தவகையில், அவரது நடிப்பில் இறுதியாக வாத்தி படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். அத்தோடு அடுத்ததாக தனுஷ் நடிக்கவுள்ள அவரது 5-வது படம் குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் நடிகர் தனுஷ் குறித்து ஒரு விஷயத்தைக் கூறிப் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக்கொண்டே இருப்பார். அதுமட்டுமல்லாது அந்த நடிகைகளிடம் நன்றாக வேலையும் வாங்கிக்கொள்வார்” எனக் கூறியுள்ளார்.
“குறிப்பாக பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்திற்கு காரணமே தனுஷ்தான். அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும்போதே இரவு 12 மணிக்கு தனுஷ் ஃபோன் செய்து அவருடன் பேசுவார். இதனால் அந்த நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து இறுதியில் 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்” எனவும் கூறியுள்ளார் பயில்வான்.