fbpx

பழம்பெரும் பாடகிக்கு பத்மபூஷண் விருது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள், உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தாண்டு பத்ம விருதுகள் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழகத்தை சேர்ந்த பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தமிழில், மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வாணி ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி நிபுணர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோரும், பாலம் கல்யாண சுந்தரமும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைப்பிரிவில் கல்யாண சுந்தரம் பிள்ளைக்கும், மருத்துவப் பிரிவில் மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஓஹோ..!! இதனால தான் டயர் கருப்பா இருக்கா..? வாகன ஓட்டிகளே இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Jan 26 , 2023
நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் மட்டும் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது என யோசித்துள்ளீர்களா..? இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். கோடிக்கணக்கில் செலவு செய்து விதவிதமான கலர்களில் நீங்கள் ஆசை, ஆசையாய் வாகனங்களை வாங்கினாலும், அதன் டயர் கலர் மட்டும் கருப்பாகத் தான் இருக்கும். கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்னர் தான் டயரை முதன் முதலில் கண்டுபிடித்துள்ளனர். அப்போதைய டயர்கள் தற்போதைய கருப்பு கலரில் இல்லை. டயர்கள் […]

You May Like