fbpx

Pandian Stores | முடிவுக்கு வந்ததா ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’..? கிளைமாக்ஸ் புகைப்படமா இது..? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

விஜய் டிவியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன்-தம்பிகளுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு இந்த சீரியல் நகர்கிறது. டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ், தற்போது சலிப்பு ஏற்படுத்தும் வகையில் சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக தனத்துக்கு கேன்சர் என்றும் அதற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த காட்சிகள் ஒளிபரப்பானது.

இதனையடுத்து முல்லை, மீனா தனத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் ஆபரேஷனை முடித்துள்ளனர். ஆனால், கதிருக்கும் இந்த விஷயம் தெரிந்து விட்டது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தாங்கள் கட்டி வந்த புது வீட்டில் இருந்து ஒரு குரூப் போட்டோவை எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் “இது கிளைமாக்ஸ் போட்டோவா..? சீரியல் இதோடு முடியப்போகிறதா..? என கவலையுடன் கேட்டு வருகின்றனர்.

Chella

Next Post

வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் வெளியான புதிய அறிவிப்பு……! எங்கே தெரியுமா…..?

Fri Aug 11 , 2023
முதலில் சாதாரணமாக உள்நாட்டு விமான நிலையமாக இருந்த திருச்சி விமான நிலையம், பின்னர் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. அதோடு, விமான நிலையம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஒரு வருடத்திற்குமாறு பத்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமான நிலையத்தின் மூலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் […]

You May Like