fbpx

’’பாண்டியன்ஸ்டோர்ஸ்’’ முல்லை கதாபாத்திரத்திற்கு மீண்டும் ஆள் தேவை… ’நன்றி –குட் பை ’ கூறிய காவ்யா…

 பாண்டியன்ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வரும் காவ்யா விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அந்த கதா பாத்திரத்திற்கு மீண்டும் ஆள் தேடும் சூழல் உருவாகியுள்ளது.

பாண்டியன்ஸ்டோர்ஸ் என்ற தொடர்கதை ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா சீரியலை விட்டு விலகுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்த சித்து என்ற சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அந்த இடத்தை காவ்யா நிரப்பினார். கடந்த 2020 ம்ஆண்டு டிசம்பரில் இருந்து காவ்யா முல்லையாக நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் சித்துவின் ரசிகர்களை தக்க வைக்க சிரமப்பட்ட காவ்யா தற்போதுதனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார். அந்த அளவிற்கு கதையுடன் காவ்யா ஒன்றிவிட்டார்.

இந்நிலையில் இவர் குட்பை கூறியுள்ளதால் மீண்டும் இந்த கதாபாத்திரத்திற்கு ஆள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் பாரதி கண்ணம்மாவிலும் நடித்துவந்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதுவரை உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். இதனால் அடுத்ததாக யார் வரப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கண்ணனுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தையும் மாற்றி விட்டார்கள். முல்லை கதாபாத்திரம் 2 முறை மாற்றி விட்டார்கள். தனமும், மீனாவும்தான் முக்கியமான இந்த இடத்தை  யாருக்கும் கொடுக்காமல் தக்கவைத்துக்கொண்டுள்ளார்கள்.

Next Post

தூள் கிளப்பும் சர்தார் படத்தில் கார்த்தி பாடிய ‘ஏறுமயிலேறி’ பாடல்

Tue Oct 11 , 2022
தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்தி நடித்த சர்தார் திரைப்படத்தின் ஏறு மயிலேறி பாடல் வெளியாகி தூள் கிளப்பி வருகின்றது.. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார்’. அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்து உள்ள இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் […]
’மிரட்டும் கெட்டப்புகளில் நடிகர் கார்த்தி’..!! ’சர்தார்’ படத்தின் டீசர் வெளியீடு..!!

You May Like