விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Stores). கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர், இப்போது வாழ்க்கையில் மக்கள் மறந்துள்ள கூட்டுக் குடும்பம் பற்றிய கதை. அண்ணன்-தம்பிகள் இடையில் பிரிந்தாலும் பாசத்தின் பெயரில் மீண்டும் சேர்ந்துவிடுகிறார்கள்.
இந்நிலையில், இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவிற்கு மட்டும் அண்மையில் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். ஆனால், அவர் வெளியேறினால் கதை நன்றாக இருக்காது. அவரது கதாபாத்திரத்தில் வேறொரு வந்தால் எப்படி என யோசித்த தயாரிப்பு குழு அவரை சமாதானப்படுத்தி சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.