கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் அப்படத்தில் வரும் ஒரு சீன், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது.
இப்படத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று டிஜிபியான ஆஷா சரத்தின் மகனை கமல் குடும்பத்தினர் தாக்கியதில் இறந்து விடுவார். அக்கொலையை மறைக்க கொலை நடந்த ஆகஸ்ட் 2 அன்று தாங்கள் யாருமே ஊரில் இல்லை என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக, கமல் குடும்பத்தார் ஆஷா சரத்திடம் நாடகமாடுவார்கள்.

சுயம்புலிங்கம் ஸ்மார்ட் டிவிக்கள் இல்லாத காலத்தில், பாபநாசத்தில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்தவர். அவருக்கு ராணி என்ற மனைவியும் இருமகள்களும் இருந்தார்கள். அவருக்கு தோட்டத்துடன் கூடிய அழகான வீடும், கேபிள் டிவி ஆபரேட்டர் அலுவலகமும் சொந்தமாக இருந்தது. மூத்த மகள் செல்விக்கு 16 வயது மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவி. இளைய மகள் புள்ளி மீனாவுக்கு 10 வயது. துவக்கப்பள்ளி மாணவி. அழகான வீடு, மனைவி, குழந்தைகள், மத்தியதர குடும்பங்களுக்கு கிடைக்கும் வருமானம். மனைவி உடனான காதல் என வாழ்க்கை அவருக்கு சுமூகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான், மகள் செல்வி பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் பணக்கார வீட்டு பையன் வருண் பிரபாகர், அவர் குளிப்பதை படம் பிடித்து விடுவான். அவனது தாய் ஒரு பெரிய துப்பறியும் போலீஸ் அதிகாரி. செல்வியிடம் அவரது குளியல் காட்சிகளை லீக் செய்துவிடுவேன் என மிரட்டி அவரது தோட்டத்தில் உள்ள பழைய சாமான் அறைக்கு அழைப்பார் வருண். இதில் பயந்த செல்வி, அவரது தாய் ராணியையும் அழைத்து வருவார். பின்னர் திமிர் பிடித்த வருண், தாய்-மகள் இரண்டு பேரையும் பாலியல் உறவுக்கு அழைப்பார். ஆத்திரமடைந்த அம்மா ஒரே போடாக போடுவார். அவனுக்கு ஆயுள் கம்மிபோல், செத்துவிடுவான். இருவரும் சேர்ந்து தோட்டத்தில் அவனது உடலை புதைத்துவிடுவார்கள்.
இந்த விஷயத்தை சுயம்பு லிங்கத்திடம் சொல்ல. அவர், அவனைப்போன்ற சமூதாயத்துக்கு உபயோகமற்றவனின் கொலையை மறைக்க போடும் திட்டம்தான் தென்காசி பயணம். வருணின் தடயங்களை அழித்துவிட்டு, 2015ஆம் தேதி ஆகஸ்ட் 2ஆம் தேதி தென்காசிக்கு, ஒரு தியான கூட்டத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு சென்று அவர்கள் ஒரு திரையரங்கில் படம் பார்ப்பார்கள், ஓட்டலில் தங்குவார்கள், உணவு விடுதியில் சாப்பிடுவார்கள். இதற்கிடையில் வருணை, அவரது போலீஸ் தாய் கீதா தேடத் துவங்கிவிடுவார்.
சுயம்புலிங்கம் குடும்பத்தினர் தென்காசியில் இருந்து திரும்பி வழக்கமான பணிகளில் ஈடுபடுவர். அவரும் தான் வழக்கமாக செல்லும் டீக்கடை, கேபிள் அலுவலகம் என அவர் பழகும் அனைவரிடமும் தனது தென்காசி பயணம் குறித்தும், தியானம் குறித்தும் சொல்வார். போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இவர்கள் அனைவரும் வந்தாலும், ஒரே பதிலை அனைவரும் கூறி தப்பிப்பார்கள். அடிச்சு கூட கேப்பாங்க, மாத்தி மாத்தி கூட கேப்பாங்க ஆனா, பதில் ஒன்னுதான் சொல்லணும் என்று மொத்த குடும்பமும் பக்கா பிளான் இருக்கும்.
ஒரு கட்டத்தில் இவர் மீதான சந்தேகம் வலுவாகவே அந்த குழியை போலீசார் தோண்டுவார்கள். ஆனால், அதற்குள் இறந்த மாட்டின் உடல் புதைக்கப்பட்டிருக்கும். அதிகாரிகள் ஆச்சர்யத்தில் உறைந்துபோக, அவரது மைத்துனரான உள்ளூர் அரசியல்வாதி ஊடக நண்பர்களை அழைத்து போலீசார் இவர்களை துன்புறுத்துவாக பேட்டி கொடுப்பார். அடித்து கூட விசாரணை நடைபெறும் ஆனால், வருண் என்ன ஆனார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
கடைசி வரை தெரியாமலே ஊர் திரும்ப நினைக்கும் கீதா பிரபாகர் எப்படியாவது தன் மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கும். ஆனாலும், புள்ளைய ஒழுங்கா வளக்கலைன்னா இப்படிதாம்மா ஆகும் என்று கீதாவையும், ஒரு நல்ல தந்தை என்று சுயம்புலிங்கத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஒரு மிடில் கிளாஸ் தந்தையாக சுயம்புலிங்கம் (கமல்) ப்பா… வேற லெவல் நடிப்பு என சொல்ல வைத்திருப்பார். மலையாள படமான த்ரிஷயத்தின் ரீமேக்தான் இந்தப்படம். இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. பெண்ணியவாதிகள் இந்தப் படத்தை விமர்சித்தாலும், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாபநாசம் திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றது.