fbpx

”ஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து எழுதுங்க”..!! வடிவேலு பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மற்றும் குணச்சித்திர நடிகைகள் என்னதான் பல திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க தவறி விடுவார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள். அந்த வகையில், நடிகை பிரியங்கா ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தைப் பிடித்தவர். தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்குப் பிறகு மிகப்பெரிய காமெடி நடிகனாக திகழ்ந்தவர் வடிவேலு.

ஆனால், இவர் சில காலம் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. பிறகு மீண்டும் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதற்கு ஒரு காரணம் வடிவேல் என்றும் கூறலாம். வடிவேலு பற்றி குறை கூறாதவர்கள் இருக்கிறார்களா? என கேட்டால் ஒரு சிலர் இல்லை என்று தான் கூறுவார்கள்.

ஏனென்றால் அந்த அளவு வடிவேலுவுடன் நடித்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வடிவேலுவை கடுமையாக விமர்சனம் செய்தும் புகார்களை கொடுத்தும் வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் வடிவேலு தான் இப்படி செய்தாரா என பலரும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள் அந்த அளவு வடிவேலு மீது மக்களிடம் நல்ல நம்பிக்கை இருந்தது ஆனால் அதையெல்லாம் தவிடு பிடி ஆக்கினார்.

இந்நிலையில், வடிவேலுவை முதல் முதலாக ஒரு நடிகை புகழ்ந்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது வடிவேலுவுடன் மருதமலை திரைப்படத்தில் நடித்த பிரியங்கா தான். இவர் மருதமலை திரைப்படத்தில் ஒரு ஆணுடன் தாலி கட்டிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் வருவார் அப்பொழுது வடிவேலு அவருக்கு ஆதரவு கொடுத்து பேசுவார். ஆனால் பிரியங்காவை என்னுடைய பொண்டாட்டி என கூறிக்கொண்டு அடுத்தடுத்த ஆள் வருவார்கள். அந்த காமெடியில் நடித்த பிரியங்கா சமீபத்தில் வடிவேலு பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.

அதாவது வடிவேலு சாருடன் நடித்ததால் தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்துள்ளது. வடிவேலு சார் உடன் நடித்தால் சிரிப்பை அடக்கவே முடியாது. அந்த அளவு காமெடியானவர். இப்படி வடிவேலுவால் தான் தனக்கு வாழ்க்கை கிடைத்ததாக பிரியங்கா கூறியுள்ளார்.

Read More : குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமில்லையா..? சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

English Summary

When you act with Vadivelu sir, you can’t stop laughing. He is such a comedian. Priyanka has said that it was because of Vadivelu that she got her life.

Chella

Next Post

6 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்.. 76 வயதில் கண்டுபிடிப்பு..!! 70 வருட பாச போராட்டத்தின் நெகிழ்ச்சி கதை..

Mon Sep 23 , 2024
US: Boy abducted at age of 6 found alive after 70 years through online DNA match

You May Like