fbpx

வியக்க வைக்கும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்..!! 3 நாளில் இவ்வளவு கோடியா..?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சோழர்களின் கதை என்பதால், பார்வையாளர்களால் விரும்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ’பொன்னியின் செல்வன்’ படத்தின் 3 நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகியுள்ளது.

வியக்க வைக்கும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்..!! 3 நாளில் இவ்வளவு கோடியா..?

அதன்படி, உலகம் முழுவதும் 3 நாட்களில் 202.87 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளில் 78.29 கோடி ரூபாயும், 2ஆம் நாளில் 60.16 கோடி ரூபாயும், 3ஆம் நாளில் 64.42 கோடி ரூபாய் என ஒட்டு மொத்தமாக இதுவரை 202.87 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் 25.86 கோடி ரூபாயாக இருந்த வசூல், இரண்டாம் நாளில் சற்று சரிந்து 21.34 கோடி ரூபாயும், 3ஆம் நாளில் 22.51 கோடி ரூபாயும் என மொத்தம் 69.71 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. குறிப்பாக பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வசூலை பெற்றுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மணிரத்னம் படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக வசூலை பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஓபிஎஸ்-க்கு இணை பொதுச்செயலாளர் பதவி..? இறங்கி வந்த இபிஎஸ்..!! அவசரப்பட்ட ஓபிஎஸ்..!!

Mon Oct 3 , 2022
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மரியாதை குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ”உச்சநீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை வழக்குகள் முடிந்த பிறகு நடத்துகிறோம் என தெரிவித்திருக்கிறோம். ஆனால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு […]
’யாரை கேட்டு இப்படி பண்ணீங்க’..!! ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி..!! பரபரக்கும் அதிமுக..!!

You May Like