fbpx

நீதிமன்றத்திற்கு சென்ற ’பொன்னியின் செல்வன்’ வழக்கு..!! நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு சென்ற ’பொன்னியின் செல்வன்’ வழக்கு..!! நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட்செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்” என்று வாதிட்டார். இதையடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

’’இலவசமாக காண்டம் வேண்டுமா?’’ .. ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் ..

Thu Sep 29 , 2022
பீகாரில் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் எம்.டி.யும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் மாணவியிடம் கூறிய கருத்துக்கு பதில் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவி ஒருவர் பேசும் போது இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் கொடுக்க வேண்டும் என அவர் பேசினார். சுகாதாரத்தை பேணிக்காக்கவும் பல கிராம மக்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது இன்றளவும் கடினமாக இருப்பதால் அந்த பெண் […]

You May Like