fbpx

தீபாவளியோடு நீக்கப்படும் ’பொன்னியின் செல்வன்’..!! புதிய படங்களால் வரும் புதிய சிக்கல்..!!

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் நீக்கப்படுகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்துள்ள ’சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுகிறது. அதேபோல் பிரின்ஸ் திரைப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். ஆனால், இந்தப் படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது என திரைத்துறையில் கூறுகின்றனர். இந்த 2 திரைப்படங்களையும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில், பெரும்பாலான திரையரங்குகளின் ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியோடு நீக்கப்படும் ’பொன்னியின் செல்வன்’..!! புதிய படங்களால் வரும் புதிய சிக்கல்..!!

இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றியடைந்தது. அந்த திரைப்படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிட்டு இருந்தது. பொன்னியின் செல்வன் Distribution அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதற்காக வசூல் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், தீபாவளி சமயம்தான் பொன்னியின் செல்வனின் நான்காவது வாரம். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 100 திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்தை திரையிட விருப்பம் தெரிவித்தனர். ஏனென்றால், அந்த வாரத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். இது லாபகரமாக இருக்கும் என எண்ணினர்.

தீபாவளியோடு நீக்கப்படும் ’பொன்னியின் செல்வன்’..!! புதிய படங்களால் வரும் புதிய சிக்கல்..!!

ஆனால், தீபாவளிக்கு வெளியாகும் படங்களைதான் திரையிட வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று பெயர் கூற விரும்பாத சில திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் அழுத்ததிற்கு உடன்பட்டு பெரும்பாலான திரையரங்குகள் தீபாவளி படங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

தீபாவளியோடு நீக்கப்படும் ’பொன்னியின் செல்வன்’..!! புதிய படங்களால் வரும் புதிய சிக்கல்..!!

Chella

Next Post

அதானி  போட்ட திட்டம் .. ஜஸ்ட் மிஸ் ஆன அம்பானி ?

Mon Oct 17 , 2022
பணக்கார பட்டியலில் இந்தியர்களில் ஒருவரான அதானி சமீபத்தில் மாஸ்டர்திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனம் கூட ஜஸ்ட் மிஸ் ஆனது. மாஸ்டர் திட்டத்தில் ஜியோ , ஏர்டல் எப்படி தப்பித்தது என பார்க்கலாம். யாருமே எதிர்பார்க்காதவகையில்  2022 ம் ஆண்டு அலைக்கற்றைகளை அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது . இது பிற போட்டி நிறுவனங்களுக்கு சற்றே அதிர்ச்சிதான். டெலிகாம் துறை தொடர்பான ஒரு ஏலத்தில் திடீரென்று […]

You May Like