fbpx

பொன்னியின் செல்வன் நடிகர்களுக்கு சம்பளம் இத்தனை கோடியா? வெளியான முழு லிஸ்ட்..

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது.

ஒட்டு மொத்த திரை உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. படம் வெளியானதில் இருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக

படக்குழுவினர்தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டத்தின் உச்சமான பொன்னியின் செல்வன்திரைப்படத்தில் நட்சத்திரங்கள் வாங்கியுள்ள சம்பளம் குறித்து பேசப்பட்டு வருகின்றது. திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.500 கோடி ஆகும்.

இதில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் தோன்றிய விக்ரமிற்கு ரூ.12 கோடி , நந்தினி காதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு ரூ.10 கோடி , அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு ரூ.8 கோடி , வந்தியத்தேவன் கார்த்திக்கின் சம்பளம் ரூ.5 கோடி , குந்தவை திரிஷாவுக்கு ரூ.2 கோடியும் , பிரகாஷ் ராஜ்மற்றம் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ.1.5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஃபேஸ்புக் : விரைவில் 12,000 பேர் பணி நீக்கம் …

Thu Oct 6 , 2022
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மீட்டா கிட்டத்தட்ட12000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது. இது தொடர்பாக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தது 12,000 பேரை நீக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் பணிஅமர்த்தியதை நிறுத்திய முதல் நிறுவனம் ஃபேஸ்புக் அல்ல. இதற்கு […]

You May Like