fbpx

ஆத்தாடியோவ் ! ரூ.400 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்…

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது..

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதில் தமிழகத்தில் மட்டும் 163 கோடி வசூலித்திருப்பதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 750 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

அதே போல் இரண்டாவது இடத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடியை கடந்துள்ளது.

இந்த நிலையில் 400 கோடி ரூபாய் கடந்த மூன்றாவது தமிழ் படம் என்ற என்ற பெயரை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி 13 நாட்கள் மட்டுமே ஆகிறது என்பதால், இன்னும் வசூலில் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது என திரைத்துறையில் கூறுகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தில் இந்த திரைப்படம் 190 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

2,748 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை பற்றிய தகவல்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

Wed Oct 12 , 2022
கிராம உதவியாளர் எனப்படும் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.அடிப்படைத் தகுதிகள்: 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். 01-07-2022 தேதிக்கு முன்பாக 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் […]

You May Like