fbpx

பொன்னியின் செல்வன் மீண்டும் சாதனை ..!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து சாதனைபடைத்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலை குவித்த படங்களில் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தையும் மிஞ்சி பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை ஈட்டியுள்ளது.

.படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

வசூலில் சாதனை படைக்கும் ’பொன்னியின் செல்வன்’..!! 2 நாட்களில் இவ்வளவு கோடியா..?

அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் ‘விக்ரம்’ படத்தின் வசூல் சாதனையை மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ முறியடித்துள்ளது என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

‘விக்ரம்’ படத்தின் தமிழக வசூல் 180 கோடி வரை இருந்தது. அந்த வசூலை நேற்று ‘பொன்னியின் செல்வன்’ முறியடித்து தற்போது 200 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறதாம். நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதாலும் வரும் வார வசூலுடன் சேர்த்து 200 கோடியை எளிதில் கடந்துவிடும் என்கிறார்கள்.அப்படி கடந்தால் தமிழ்த் திரையுலக வரலாற்றில் ‘பொன்னியின் செல்வன்’ படம் தான் முதன் முதலில் தமிழக வசூலில் 200 கோடியைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெறும்.

Next Post

அதிர்ச்சி..!! சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம்..!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

Sun Oct 16 , 2022
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா, மாரடைப்பால் காலமானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு […]
அதிர்ச்சி..!! சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம்..!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

You May Like