fbpx

பொன்னியின் செல்வன் படத்தின் ’ராட்சஸ மாமனே’ பாடல் வெளியானது..!!

பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ’ராட்சஸ மாமனே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் ’ராட்சஸ மாமனே’ பாடல் வெளியானது..!!

ஏற்கனவே வெளியான சோழா சோழா, பொன்னி நதி பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. இதேபோல் பொன்னியின் செல்வன் டீசர், ட்ரெயிலர் ஆகியவையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ’ராட்சஸ மாமனே’ பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Chella

Next Post

டெலிகாம் நிறுவனங்கள் 30 நாள் வேலிடிட்டி பிளான் வழங்க வேண்டும்…. டிராய் அதிரடி உத்தரவு ….

Tue Sep 13 , 2022
டெலிகாம் நிறுவனங்கள் மொபைல் வேலிடிட்டிக்களை 28 நாட்கள் வரை மட்டுமே வழங்குவதால் 30 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , ’’ மொபைல் நிறுவனங்கள் மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்துக் கொள்வது போல இருக்கலாம். அதுபோன்ற பிளான் எந்த நிறுவனமும் அளிக்கவில்லை. டெலிகாம் சேவை அளிப்பவர்கள் … குறைந்த பட்சம் ’’ஒன் பிளான் வவுச்சர் ’’, சிறப்பு பிளான் வவுச்சர் […]

You May Like