fbpx

Kalki 2898 AD Day4 | பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் பிரபாஸ்! ரூ.500 கோடியை தாண்டிய கல்கி!!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.555 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படமான ‘கல்கி 2898 ஏடி’ ஜூன் 27 அன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.

‘கல்கி 2898 ஏடி’ படத்தைப் பொறுத்தவரையில் இந்தியத் திரையுலகத்தின் பெரும் நட்சத்திரங்களான அமிதாப், கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் பலமாக உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முதல் முறையாக நடிக்கும் தெலுங்குப் படம். இப்படி பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி உள்ளது என சொல்லப்படுகிறது.  உலக அளவில் சுமார் 750 கோடி வசூலித்தால் மட்டுமே இந்தப் படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.

தற்போது படம் வெளியாகி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, படம் வெளியான முதல் நான்கு நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 555 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.. தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள கல்கி, மற்ற மொழிகளிலும் கோடிகளை குவித்துள்ளது.

தெலுங்கில் மட்டும் 300 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வட அமெரிக்காவில் 4 நாட்களில் 92 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் கல்கி கலெக்ஷன் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கல்கி கண்டிப்பாக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more | சிறையில் இருந்து வெற்றி பெற்ற எம்பி ரஷீத் பதவியேற்க NIA அனுமதி!!

English Summary

Prabhas starrer ‘Kalki 2898 AD’ has been reported to have collected Rs.555 crore worldwide in 4 days of its release.

Next Post

பானிபூரியால் புற்றுநோய் வரும்..!! 5-7 வருடங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த பாதிப்பு நிச்சயம்..!! ஆய்வில் அதிர்ச்சி..!!

Mon Jul 1 , 2024
Ingredients used in pani puri have been found to contain cancer-causing elements in Karnataka.

You May Like