fbpx

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்த ’பிரின்ஸ்’..! எத்தனை கோடி தெரியுமா?

’பிரின்ஸ்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளது.

தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் ’பிரின்ஸ்’ எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமடி ஜானரில் உருவாக்கப்பட்டு வருகிறது. சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும், பிரேம்ஜி இப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமன் இசையமைக்கும் இப்படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்த ’பிரின்ஸ்’..! எத்தனை கோடி தெரியுமா?

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் சிங்கிள் அனிருத் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் எனப் படக்குழு உறுதிப்படுத்திய நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 42 கோடிக்கு இவ்விரு உரிமமும் விற்பனையானதன் மூலம் இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களிலே இப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங்காக இருக்கும் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்த ’பிரின்ஸ்’..! எத்தனை கோடி தெரியுமா?

மேலும், சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் பட அறிவிப்புகள் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

Mon Sep 19 , 2022
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை […]

You May Like