fbpx

பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கு “புஷ்பா புஷ்பா'” பர்ஸ்ட் சிங்கிள்..! ரசிகர்கள் உற்சாகம்…!

புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், வெளியாகி டிரண்டிங் ஆகி வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம், புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா புஷ்பா’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி என 6 மொழிகளில் வெளியான ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகி வருகிறது.

நெருங்கிக் கொண்டிருக்கும் உலக அழிவு.!! ‘Triple Whammy Extinction’ எப்போது நிகழும்.? அறிவியல் ஆய்வாளர்கள் கணிப்பு.!!

shyamala

Next Post

கமல்ஹாசன் என்னை பிளாக்மெயில் செய்தார்...! வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு...!

Thu May 2 , 2024
கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். செவந்த் சேனல் கம்யுனிகேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், சரத்குமார் நடித்த கூலி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களை இவர் […]

You May Like