fbpx

’ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினி..!! வெளியான புகைப்படம்..!! வைரலாக்கும் ரசிகர்கள்..!!

’ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ’ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

’ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினி..!! வெளியான புகைப்படம்..!! வைரலாக்கும் ரசிகர்கள்..!!

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் கேமராவை கவனிக்கிறார். அண்மையில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Chella

Next Post

பி.எப்.ஐ மீதான தடை தேவையற்றது; இது இஸ்லாமியர் மீதான தடையாகும்.. அசாதுதீன் ஓவைசி..!!

Wed Sep 28 , 2022
புதுடெல்லி, பயங்கரவாத செயல்களை செய்து, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. அந்த அமைப்புக்கு ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் மீதான ஐந்தாண்டு தடைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். […]

You May Like