fbpx

கோபத்தில் வீட்டை அடித்து நொறுக்கிய ரஜினி..!! பயந்துபோன மனைவி..!! உடனே வந்த குரு..!! என்ன சொன்னாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக அடிதடி பஞ்சாயத்தே நடந்து வரும் நிலையில், ரஜினி தன்னுடைய சினிமா வாழ்க்கையே வெறுத்து வீட்டையே அடித்து நொறுக்கிய சம்பவம் கூட நடந்துள்ளதாம். வெறும் நடத்துனராக இருந்த சிவாஜி ராவ், தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார். வேலை செய்யும் போது அவரிடம் இருந்த ஸ்டைலை பார்த்த நண்பர்கள், திரைப்பட கல்லூரியில் சேர்த்து விட்டுள்ளனர்.

அங்கு முறையாக நடிப்பைக் கற்று இருக்கிறார். பின்னர், பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிப்புக்குள் எண்ட்ரி கொடுத்தார் ரஜினி. தொடர்ச்சியாக வில்லனாக அறிமுகமான ரஜினியை நாயகனாக தமிழ் சினிமாவுக்குள் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்தார். நடத்துனராக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த ரஜினிக்கு இந்த புகழ் முதலில் மூச்சு முட்ட செய்திருக்கிறது. இதற்கிடையே, பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல் சின்ன வட்டத்திற்குள் குறுகிய வாழ்க்கையாகி போனதால் அது அவரை மேலும் கோபமடைய செய்துள்ளது.

ஒரு கட்டத்தில் இந்த கோபம் எல்லை மீற வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். தூள் தூளாக எல்லாத்தையும் அடிக்க கத்திக்கொண்டே மூர்க்கமான ரஜினியை பார்த்த போது அவர் மனைவிக்கே அதிர்ச்சியாகி விட்டதாம். இதனால் ரஜினி யார் பேச்சை கேட்பார் என்று யோசித்த உடனே பாலசந்தரின் நினைவு வந்திருக்கிறது. அவருக்கு உடனே போன் செய்து வீட்டிற்கு வாருங்கள் எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, என்னமோ ஏதோ என பயந்த பாலசந்தர், உடனே ரஜினி வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, அவர் ரூமே நொறுக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்துள்ளது. ஆனால், பாலசந்தரின் புகைப்படம் மட்டும் அசையாமல் அங்கையே மாட்டப்பட்டு இருந்தது. பாலசந்தர், ரஜினியை பார்த்து இதை மட்டும் ஏன் விட்ட எனக் கேட்டுள்ளார்.

நான் எங்கையோ சிவாஜி ராவா இருந்தேன். எனக்கு ஏன் இந்த வாய்ப்பை கொடுத்து இப்படி ஒரு புகழ கொடுத்தீங்க எனக் கேட்டுள்ளார். உடனே பாலசந்தர் வாய்ப்புக்காக ஒவ்வொருவரும் அலைக்கின்றனர். ஆனால், உனக்கு புகழ் தானாக தேடி வந்து இருக்கிறது. அனுபவி, இதை சரியாக பயன்படுத்து என அறிவுரை கூறினாராம்.

Chella

Next Post

பல்லடம் கொலை வழக்கு..!! சிசிடிவியில் சிக்கிய முக்கிய குற்றவாளி..!! நெருங்கியது போலீஸ்..!! மேலும் ஒருவர் கைது..!!

Tue Sep 5 , 2023
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல், செந்தில் குமாரை வெட்டிக் கொன்றது. இதனை தடுக்க வந்த அவருடைய தம்பி மோகன்ராஜையும், அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் […]

You May Like