நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – வசீகரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இளைய மகள் சௌந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.
சௌந்தர்யா – அஸ்வின் விவாகரத்துக்குப் பின்னர் வேத் தனது தாய் சௌந்தர்யாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு சௌந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் உடன் மீண்டும் திருமணம் நடைபெற்றது. சௌந்தர்யா திரைப்பட தயாரிப்புத் துறையில் பணியாற்றி வருவதோடு, HOOTE என்ற சமூக வலைதளத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், விசாகன் – சௌந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”கடவுளின் ஆசீர்வாதத்தோடும், எங்கள் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும் வேதின் சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணக்கமுடியை நானும், விசாகணும் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், சிறப்பான மருத்துவர்களுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.